என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மூன் ஜே இன்
நீங்கள் தேடியது "மூன் ஜே இன்"
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் வரும் 11-ம் தேதிவரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று மாலை டெல்லி வந்தடைந்த தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.
இந்தியா மற்றும் தென் கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையொப்பமானது. தென் கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதைதொடர்ந்து, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்த மூன் ஜே-இன் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தென்கொரியா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள மூன் ஜே-இன்-னுக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை மாலை விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தும் தென்கொரியா அதிபர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது. #SushmameetsKoreanPresident #SushmameetsMoonJae-in

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் உதவி அவசியம் என தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி இன்று புதுடெல்லியில் தெரிவித்துள்ளார். #SingaporeSummit #MoonJaein #PMModi
புதுடெல்லி:
சமீபத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக நிலவிவந்த பதற்றமான சூழ்நிலை தற்போது ஓரளவு தணிந்துள்ளது.
இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி என்னா பார்க், இன்று செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் விவாதிக்க உள்ளார்.
மேலும், கொரியா தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தென்கொரியா ஈடுபட்டு வருகிறது, இது சாதாரணமான ஒன்றல்ல மிகவும் கடினமான ஒரு முயற்சியாகும். இதற்கு இந்தியாவின் உதவியும் தேவைப்படுகிறது.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, சர்வேதேச நாடுகளிடையே இந்தியாவிற்கு என தனி செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி சிங்கப்பூர் சந்திப்பு ஒப்பந்தம் வெற்றி பெறவும், அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத அமைதியான கொரிய தீபகற்பத்தை உருவாக்கவும் இந்தியா முன்வர வேண்டும்.
அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் வடகொரியாவை இணங்கச்செய்ய இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #SingaporeSummit #MoonJaein #PMModi

×

X